‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
ஹரிகுமார்- கார்த்திகா நடிப்பில் வெளியான படம் தூத்துக்குடி. அந்த படத்தை சஞ்சய்ராம் இயக்கியிருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கு கிளியாந்தட்டு தூத்துக்குடி-2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் பாகத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தூத்துக்குடியிலேயே நடந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்துள்ளது.
சஞ்சய்ராம் இயக்கி வரும் இந்த படத்தில் குகன் என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றபடி, சஞ்சய்ராம் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம். முதல் பாகத்தில் ஹரிக்குமார் நடித்தது போன்ற ஒரு வெயிட்டான வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.
இதுவரை, 95 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில, இன்னும் 5 சதவிகிதம்தான் படப்பிடிப்பு நடைபெற வேண்டிய உள்ளதாம். இதற்கிடையே போஸ்ட் புரடக்சன்ஸ் வேலைகளும் துரிதமாக நடந்த வரும் நிலையில், ஏப்ரலில் திரைக்கு வருகிறதாம் கிளியாந்தட்டு தூததுக்குடி-2. மேலும், முதல் பாகத்தில் மருந்துக்கும் கவர்ச்சியை காண்பிக்காத சஞ்சய்ராம் இந்த படத்தில் படுகவர்ச்சியான காட்சிகளையும் இணைத்துளளாராம்.