தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
ஒரு மரணத்தின் வாசலில் துவங்குகிறது பச்சையின் வாழ்க்கை . மரண வீட்டில் குழுமியிருக்கும் மனித்ர்களின் முகங்களில் வருத்தமோ, துயரமோ ஏதும் இல்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கிற 27ம் வயதில் பச்சை இறந்திருக்கிறான் என்கிற சிறு ஆதங்கம் கூட அவர்களிடம் இல்லை. மரண வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கட்டிய மனைவியே மகிழ்ச்சியாக இருக்கிறாள். அப்படியென்ன கொடுமையானவனா பச்சை? அவனது முகம் தான் என்ன.? அவன் யார்..? யாருக்கும் பிடிபடாத ஒருவனின் அசாத்திய வாழ்க்கையை அவன் எரிகிற சிதையை பார்த்தபடியே அவன் உடன் சுற்றிய மனிதர்கள் விளக்குவதே "அ" திரை வழங்கும் "பச்சை என்கிற காத்து " படத்தி்ன் கரு, கதை , களம் எல்லாம்.
கயமை நிறைந்த கண்ணியம் தொலைந்த அரசியல் சூறாவளியில் கடைநிலையிலிருந்து உயர பறக்க ஆசைப்பட்ட பச்சை என்கிற காத்து என்னவாகிறான் என அவரவர் பச்சையை பார்த்த கோணங்களில் இருந்து அழுத்தத்தோடும், எள்ளி நகையாடும் எத்தனிப்போடும் சொல்லிச் செல்வதுதான் பச்சை என்கிற காத்து படத்தின் மொத்த கதையும் . புதுமுகங்கள் வாசகர் தேவதை, மு.ரா, அப்புக்குட்டி, துருவன், பரத்குமார், மருதை, சத்யபாமா, துளசி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கும் கீரா. இப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் பிடிக்க செய்த டிரையிலரே மிகப் பிரமாண்டமான அதே நேரம் யதார்த்தமாக எல்லோரையம் கவர்ந்துள்ளது. கோடம்பாக்கத்தில் என்றால் படத்தை பற்றி கேட்கவும் வேண்டுமா? என்ன! அசுவத்தாமன், இந்துமதி, வைகறையாழன் தனலட்சுமி இருவரது தயாரிப்பிலும், திலீபன் - சங்கர் , அஸ்வின்ராஜா இருவரது இணைதயாரிப்பிலும் விரைவில் வெளிவர இருக்கிறது " பச்சை என்கிற காத்து!"