காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |
இளம் பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவராக இருந்தவர் கபிலன். சில வருடங்களுக்கு முன், உன் சமையல் அறையில் உப்பா சர்க்கரையா..ஆல் தோட்ட பூபதி உட்பட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி வந்தார். குறிப்பாக விஜய் நடித்த அனைத்துப் படங்களிலும், அவருக்கான அறிமுகப்பாடல்களை கபிலனே எழுதினார். விஜய்யின்னு இமேஜை பில்ட்அப் பண்ணும் வகையில் கபிலன் எழுதும் வரிகள் விஜய்க்கும் மிகவும் பிடித்துப்போய், தன்னை வைத்து படம் பண்ணும் இயக்குநர்களிடம் எல்லாம் கபிலனை வைத்து அறிமுகப்பாடல் எழுத வைக்கும்படி விஜய்யே கேட்டுக்கொள்வார்.
விஜய்யைப் போலவே கமலும் கபிலனின் கவிதை வரிகளுக்கு ரசிகர். அதன் தொடர்ச்சியாய் தசாவதாரம் படத்தில கபிலனை நடிகராக்கினார் கமல். இப்படியாக மளமளவென வளர்ந்து வந்த கபிலன் என்ன காரணத்தினாலோ திடீரென காணாமல் போனார். நா.முத்துகுமார், மதன் கார்க்கி என்ற இரு பெரும் கவிதை சூறாவளியினால் காணாமல் போனவர்களில் கபிலனும் ஒருவர் என்றானது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபிலனின் பாடல் வரிகள் காதில் விழுகின்றன. கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடித்தா என்ற பாடலை எழுதி இருக்கிறார் கபிலன்.




