பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |
நடிகை ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து செய்தார். நீதிமன்ற வழக்கில் அவரது மகளும் தந்தையுடன் சென்று விட்டார். இந்த நிலையில் விரக்தியில் தனிமையில் வசித்து வந்த ஊர்வசி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டரும், சிவில் என்ஜினீயருமான சிவபிரசாத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 50 வயதை நெருங்கும் நேரத்தில் ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் இரண்டாவது திருமணம் செய்தது ஏன் என்பது பற்றி ஊர்வசி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: சிவபிரசாத் யாரோ எவரோ அல்ல எங்கள் குடும்ப நண்பர். எங்கள் வீட்டின் நல்லது கெட்டதில் முதல் ஆளாக இருப்பார். எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருக்கும் அவரை பிடிக்கும் குறிப்பாக என் தாத்தாவுக்கும், தம்பி கமலுக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஒருநாள் மன அமைதிக்காக திருவண்ணாமலை ரமாணஸ்ரமத்திற்கு சென்றோம். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது அங்கு மாலை கொண்டு வந்த பூஜாரி என் அருகில் அமர்ந்திருந்த சிவபிரசாத்தை என் கணவர் என்று கருதிக் கொண்டு இரண்டுபேருக்கும் மாலை அணிவித்து விட்டார். பதறிப்போய் சிவா அதனை கழற்ற முயன்றார். அருகில் இருந்த எனது தாத்தா அவரை தடுத்து விட்டார். பூஜை முடியும் வரை இருவரும் கழுத்தில் மாலையுடன் இருந்தோம். அந்த நிமிடங்கள் என் மனதில் என்னென்வோ நினைவுகள் தோன்றியது. அதுவரை மறு திருமணம் பற்றி யோசித்திராத எனக்கு அதைப் பற்றிய எண்ணம் வந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு நான்கு வருடங்கள் காத்திருந்தோம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம். தாத்தா எங்களை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்த தொடங்கினார். அதன்பிறகுதான் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு பல கோவில்களுக்கு சென்று வழிபட்டோம். இப்போது என் வாழ்வில் இழந்த சந்தோஷங்கள் திரும்ப கிடைத்திருக்கிறது.
இவ்வாறு ஊர்வசி கூறியுள்ளார்.