தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
சிருங்காரம் படத்தை டைரக்ட் செய்தவர் சாரதா ராமநாதன். சிருங்காரம் 3 தேசிய விருதுகளை பெற்றது. தற்போது சாரதா புதிய திருப்பங்கள் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். நந்தா, ஆண்ட்ரியா நடித்துள்ள இந்தப் படம் குழந்தைகளை கடத்தும் அண்டர்வேர்ல்டு தாதாக்கள் பற்றியது.
இதற்கிடையில் சாரதா ராமநாதன் நாட்டியானுபவா என்ற பெயரில் இந்திய பரதநாட்டியத்தின் வகைகளையும், பெருமையையும் கூறும் டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இதில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதகளி, மணிப்புரி நடனம் போன்றவை இடம் பெற்றுள்ளது. நடனத்திற்கு பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், பிஜு மகராஜ், ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். லால்குடி ஜிஜேஆர்.கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். (அருகில் உள்ள படத்தில் இருப்பது டைரக்டர் சாரதா ராமநாதன், மோகினி ஆட்ட கலைஞர் சந்தியா, ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட்).