Advertisement

சிறப்புச்செய்திகள்

ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இளையராஜா' பயோபிக் : அறிவிப்போடு கடந்து போன இரண்டு ஆண்டுகள்…

21 மார், 2026 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-biopic-Two-years-have-passed-since-the-announcement…
Advertisement

இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை 'இளையராஜா' என்ற பெயரிலேயே பயோபிக் படமாக எடுப்பதாக மார்ச் 20, 2024ம் ஆண்டு அறிவித்தனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவித்தார்கள். அதற்காக நடைபெற்ற அறிவிப்பு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரையுலகின் முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், படத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை. கடந்த மாதம் இந்தப் படத்திலிருந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் விலகியதாகத் தகவல் வெளியாகியது. அது உண்மையல்ல, அவர் தொடர்கிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் நடிக்க 'டிசி' படத்தை இயக்கி வரும் அருண் மாதேஸ்வரன், அப்படத்தை முடித்த பிறகு 'இளையராஜா' பயோபிக்கை இயக்குவார் என்றார்கள்.

இளையராஜா போன்ற சாதனையாளர் ஒருவரின் படத்தை அறிவித்துவிட்டு, இரண்டு வருடங்களாக ஆரம்பிக்காமல் இருப்பது சரியா என இளையராஜா ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளியானது 'துரந்தர் தி ரிவெஞ்ச்'தமிழில் வெளியானது 'துரந்தர் தி ... வருத்தப்பட்ட சிறுமியை அழைத்து விருந்து வைத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா வருத்தப்பட்ட சிறுமியை அழைத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap