நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

2025ம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'கருப்பு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ஆகிய படங்களின் வெளியீட்டு அறிவிப்பும், 'லீடர்' படத்தின் வெளியீட்டு அறிவிப்பும் நேற்று ஒரே நாளில் வெளியாகின.
நேற்று அமாவாசை நாள் என்பதால் ஒரே நாளில் இதன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். 'கருப்பு' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு அடுத்த வாரம் தான் வரும் என்று சொன்னார்கள். ஆனால், நேற்றே வெளியிட்டுவிட்டார்கள். மே மாதம் 14ம் தேதி இப்படம் வெளியாகிறது.
கடந்த வருடத்தில் இரண்டு முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. அப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
'லீடர்' படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தப் படங்களுடன் ஒரு ரீ ரிலீஸ் படத்தின் அறிவிப்பையும் நேற்று வெளியிட்டுள்ளார்கள். 'அமாவாசை' என்ற கதாபாத்திரத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி இப்போதும் பேசப்படும் படமாக இருக்கும் அரசியல் படமான 'அமைதிப்படை' படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. 1994ல் வெளியான இந்தப் படம் 4 கே, டால்பி ஒலியில் வெளியாகப் போகிறது.
ஏப்ரல் 23ல் தமிழக சட்டசபைத் தேர்தல் இருந்தாலும் தேர்வுகள் முடிந்து விடுமுறை நாட்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என்பதால் அடுத்தடுத்த இடைவெளியில் படங்களை வெளியிடுகிறார்கள்.