Advertisement

சிறப்புச்செய்திகள்

8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: தடைகள் மற்றும் சிரமங்களைக் கடந்து வெளிவந்தும், பெரிய வெற்றியைப் பெறத் தவறிய “குறவஞ்சி”

03 பிப், 2026 - 03:11 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Kuravanji”-emerged-despite-overcoming-obstacles-and-difficulties,-but-failed-to-achieve-great-success
Advertisement


மு கருணாநிதி, எம் ஜி ஆர், எம் ஜி சக்ரபாணி, பி எஸ் வீரப்பா, இயக்குநர் ஏ காசிலிங்கம் என இந்த ஐந்து பேர் இணைந்து நடத்தி வந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான் “மேகலா பிக்சர்ஸ்”. சில காலங்களுக்குப் பின் எம் ஜி ஆர், எம் ஜி சக்ரபாணி, பி எஸ் வீரப்பா ஆகியோர் அதிலிருந்து விலகிய நிலையில், மு கருணாநிதியும், இயக்குநர் ஏ காசிலிங்கமும் பங்குதாரர்களாக இருந்து “மேகலா பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்த ஒரு திரைப்படம்தான் “குறவஞ்சி”.

1957ம் ஆண்டு இந்த இருவரின் முயற்சியில் படத்திற்கான தொடக்க விழா வடபழநி பாரமவுண்ட் ஸ்டூடியோவில் ஏற்பாடாகியிருந்த நிலையில், படத்தின் இயக்குநராக ஏ காசிலிங்கமும், படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை மு கருணாநிதியும் பொறுப்பேற்க, இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன், ராஜசுலோச்சனா, ஓ ஏ கே தேவர், மைனாவதி, குலதெய்வம் ராஜகோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தனர்.

கவிஞர் கண்ணதாசன், தஞ்சை என் ராமய்யாதாஸ், மு கருணாநிதி ஆகியோர் படத்திற்கான பாடல்களை எழுத, பின்னணிப் பாடகர் சி எஸ் ஜெயராமன் இசையமைப்பில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யபட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தில் குறிப்பிட்ட சில வசனங்களை பேசமாட்டேன் என நடிகை ராஜசுலோச்சனா மறுப்பு தெரிவிக்க, அதன் காரணமாக படத்திலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டு, பின் அந்தக் கதாபாத்திரத்திற்காக நடிகை சி ஆர் விஜயகுமாரி ஒப்பந்தமும் செய்யப்பட்டார்.

இதனிடையே தயாரிப்பு செலவுக்காக பைனான்ஸ் ஏற்பாடு செய்வதற்காக இயக்குநர் ஏ காசிலிங்கம், நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி மற்றும் சில நண்பர்களோடு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஆந்திராவிலுள்ள ஓங்கோல் என்ற ஊரில் இவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளாக, பலத்த காயமுற்ற இவர்கள் ஓங்கோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, பின் சென்னை வந்தடைந்தனர். இதன் காரணமாகவும் “குறவஞ்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் சுணக்கம் ஏற்பட்டது.

இதன் பின்னர் மேலும் சில பிரச்னைகள் காரணமாக படத்தின் நாயகன் எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் நாயகி விஜயகுமாரியும் படத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட்டு, பின் அவர்களது கதாபாத்திரங்களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், நடிகை சாவித்திரியும் ஒப்பந்தமாயினர். நடிகர் சிவாஜிகணேசன் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியிருந்த இந்த காலகட்டங்களில், அவர் அதுவரை சார்ந்திருந்த அரசியல் கட்சியான திமுகவிலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட, மேலும் “குறவஞ்சி” படத்தின் வெளியீட்டில் தடங்கல் ஏற்பட்டதால், ரசிகர்களின் கொந்தளிப்பு அதிகமாகி, “குறவஞ்சி” திரைப்படத்தைப் பார்க்கமாட்டோம் என சொல்லும் அளவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.

அப்போது படத்தின் இயக்குநர் ஏ காசிலிங்கம், மு கருணாநிதி இருவரும் இணைந்து, பல சிரமங்களுக்கு இடையே, 1960ம் ஆண்டு மார்ச் திங்கள் 4 அன்று, தமிழகம் முழுவதும் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு, படத்தை முடித்தும் வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லாததாலும், படத்தில் கதாபாத்திரங்கள் சரியாக அமையவில்லை என்ற பத்திரிகைகளின் விமர்சனங்களாலும் இந்த “குறவஞ்சி” திரைப்படம் பெரும் வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க அப்போது தவறியது என்பதை யாரும் மறுக்க இயலாது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் காலமானார்இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் ... ஜனநாயகனுக்காக என் படத்தை ஓராண்டு கூட தள்ளி வைப்பேன் : டி ராஜேந்தர் ஜனநாயகனுக்காக என் படத்தை ஓராண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap