ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
கொண்ட கொள்கையில் பிடிப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டவர். இவருடன் சினிமாவை பொருத்திப்பார்க்கவே முடியாத பழுத்த சித்தாந்தவாதி. அப்படியான பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, எப்படித்தான் சினிமா ஹீரோவானார்.
ஆடிட்டர் அரசியல்வாதியாகி, அதிரடி பேச்சால் கட்சியினரை ஈர்ப்பார். எதிர்க்கட்சியினர் வயிற்றிலோ புளியை கரைப்பார். தேசிய அளவில் பொறுப்பேற்றும், தமிழகத்தில் கட்சியின் பொறுப்பு தலைவராகவும் செயல்பட்ட எச். ராஜா, சினிமா ஹீரோவானார் என்றால் நம்ப முடிகிறதா.
'கந்தன் மலை' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியான பின்பும் நம்பாமல் இருக்க முடியுமா. சண்டே ஸ்பெஷலுக்காக அணுகியபோது அரசியல் கூடுதலாக சினிமா என செம 'பிஸி'யாக இருந்தவர் கூறியதாவது:
சினிமாவில் இருந்து பலரும் அரசியலுக்கு வரும் நாளில், அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறேன். காரணம், நண்பர் ஒருவர் சினிமா எடுக்க வேண்டும் என்றார். கதை திருப்பரங்குன்றம் முருகன் பற்றியது என்பதால் ஒத்துக் கொண்டேன். படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துள்ளது.
படத்தில் கொடுக்கு மீசையுடன் கிராமத் தலைவராக வருகிறேன். நடிப்பில் ஆர்வமில்லைதான். நமது கொள்கையை சொல்லணுமே. அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதனால் நடித்தேன், அவ்ளோதான். இதை ஒரு தொழிலாகவே செய்யும் திட்டம் எதுவுமே கிடையாது.
'கந்தன்மலை' படம் ஒன்றரை மணி நேரம் ஓடும். கதையில் ஆன்மிகம் அதிகமாக இருக்கும். சமூக கதைதான். எந்த மாதிரியான படம், கதை என இப்போது பேச முடியாது. இதில் மக்களுக்கு நல்ல செய்தி இருக்கும். ஹிந்துத்துவா தத்துவத்தை மிகைப்படுத்தி இருக்கும். இல்லையெனில் நாங்கள் சினிமாவுக்குள் வர அவசியம் இல்லையே.
அரசியல் ரீதியாக 'சப்போர்ட்' உள்ளதா என்றால், இல்லை. சினிமா நடிப்பது 'பியூர்லி' பெர்சனல்தான். சித்தாந்தத்தை சினிமாவில் சொல்லும் போது ஆதரவாளர்களின் ஆதரவு உறுதியாக இருக்கும். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டின் போது, பா.ஜ.,வின் எல்லா மூத்த தலைவர்களும் வந்திருந்து வாழ்த்தியது மகிழ்ச்சியான விஷயம்.
கந்தன்மலை என்பதால் கட்சியினர் வேறு யாராவது நடிக்கின்றனரா என்றால் அதுவும் இல்லைதான். கதை திருப்பரங்குன்றம் மலை பற்றிய வரலாற்று உண்மைகள், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் எனக்கு ஜோடியாக நடிகைகள் கிடையாது. படத்தின் கதை ஹீரோவை மையமாகக் கொண்டது. ஆனால் ஹீரோயின் என்று இல்லை.
காமெடி, பொழுது போக்கு, பாடல் என எல்லா சினிமாத்தனமும் இருக்கும். இதுஒன்றும் டாக்குமென்டரி இல்லையே. ஊர்த்தலைவரான எனக்கும் ஆக் ஷன் ரோல் உண்டு. இப்போதைக்கு இதுபோதும்.
இவ்வாறு கூறினார்.
'அரசியலில் நீங்கள் பேசுவதெல்லாம் பெரிதாக 'டிரெண்ட்' ஆகிவிடும். அதுபோல சினிமாவும் இருக்கும் என நினைக்கிறீர்களா' என்று கேட்டதற்கு, 'எனக்கு திருப்பரங்குன்றம் முருகன் அருளும் இருக்கும். அதுபோல மக்களுடைய ஆதரவும் வேணும்' என்றார்.