விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் 'அம்மா (AMMA)' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மோகன்லால் சில மாதங்களுக்கு முன்பு வரை பொறுப்பில் இருந்தார். கடந்த வருடம் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம், அதன் காரணமாக நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் மீது எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சிலரின் கைதுகள் காரணமாக தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கூட, மீண்டும் மோகன்லாலின் தலைமையில் புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுத்து அறிவிக்குமாறு பலரும் கேட்டுக் கொண்டனர். ஆனால் மீண்டும் தலைவர் பதவியில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என மோகன்லால் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தலை நடத்த தற்போது நடிகர் சங்கத்தை கவனித்து வரும் அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இதையடுத்து தற்போது பலரும் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர்.
இதில் ஆச்சரியமாக கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் தலைவர் பதவிக்கு தற்போது விண்ணப்பித்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத்திலிருந்து அதன் செயல்பாடுகள் பிடிக்காமல் பல நடிகைகள் குற்றச்சாட்டுக்களை வைத்து வெளியேறியபோது, சங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து செயல்பட்டு வந்தவர் தான் ஸ்வேதா மேனன். மோகன்லால் தான் மீண்டும் தலைவராக வேண்டும் என இவரும் சமீபத்திய பொதுக்குழுவில் கூட கூறியிருந்தார். ஆனால் மோகன்லால் மறுத்துவிட்ட நிலையில் தற்போது தலைவர் பதவிக்கு நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் விண்ணப்பித்துள்ளார் ஸ்வேதா மேனன்.