இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் |
சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ள படம் 'சென்னை பைல்ஸ் : முதல் பக்கம்'. அனீஸ் அஷ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய ஏஜிஆர் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது: நான் கர்நாடகாவை சேர்ந்தவள் என்றாலும், எனக்கு வாய்ப்பு தந்து அழகுபார்த்த இந்த மண்ணுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழ் தெரியாது. நடிப்பும் சரியாக வரவில்லை. இன்னொரு மாநிலத்தை சேர்ந்தவள் என்றாலும், என் திறமையை மதித்தார்கள்.
தமிழ் சினிமாவில் மட்டும்தான் பேதங்களையும் கடந்து திறமைக்கு மதிப்பு தருகிறார்கள். அந்தவகையில் தமிழ் ரசிகர்களுக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை ஈர்ப்பேன். தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் திரையுலகத்திற்கு நன்றி. 'காளி', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'சிங்க பெண்ணே' என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து தமிழில் நடிப்பேன். என்றார்.