லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சாமி, குத்து, ஏய், பரமசிவம், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கோட்டா சீனிவாசராவ் ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 83
தமிழில் பெருமாள் பிச்சை என்ற கேரக்டரில் சாமி படத்தில் வில்லனாக அறிமுகமாகி, முதல் படத்தில் தனது நடிப்பால் பலரின் மனதை கவர்ந்தவர். பின்னர் பல படங்களில் வில்லனாக குணசித்திர வேடங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் அதிகமான படங்களில் நடித்து 6 நந்தி விருது பெற்றுள்ளார். தெலுங்கில் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும் மட்டுமல்ல 1999-2004ல் விஜயவாடா கிழக்கு தொகுதி எம் எல் ஏ வாகவும் இருந்தவர்.
சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவரின் உடல் நலிந்த போட்டோக்கள் வெளியாகி பலரை சோகமடைய வைத்தது. இந்நிலையில் ஐதராபாத்தில் கோட்டா சீனிவாசராவ் காலமானார். அவருக்கு திரையுலகினர் சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.