தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பொதுவாக, ராஜமவுலி படங்களில் இதிகாசங்கள், சனாதனம் டச் இருக்கும். அவர் படங்களில் இந்து கடவுள்கள், இந்து தர்மம் போற்றும் சீன்கள் இருக்கும். பாகுபலியில் சிவன் பாடல், ஆர்ஆர்ஆர் படத்தில் ராமர் சாயல் என பல விஷயங்களை சொல்லலாம். இப்போது மகேஷ்பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை அவர் இயக்கி வருகிறார். படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, மாதவன் உட்பட பலர் இருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதைப்படி உலகம் முழுக்க சென்று மூலிகை, வேர்களை தேடுபவராக ஹீரோ கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் அனுமனை நினைவுபடுத்துகிறது என்று கூறப்படுகிறது. ஒடிசாவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், முக்கியமான போர்ஷனை வாரணாசி எனப்படும் காசியில் படமாக்க நினைத்தார் ராஜமவுலி. ஆனால், அங்கே படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்பதால், ஐதராபாத் பிலிம் சிட்டியில் அசல் காசி மாதிரியான செட்டை உருவாக்க சொல்லியிருக்கிறார். அந்த செட் 50 கோடியில் உருவாக்கப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான சீன்கள் அங்கே எடுக்கப்பட உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யாவிலும் நடக்க உள்ளது என அந்த படக்குழு தெரிவிக்கிறது.