கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கமலுடன் இணைந்து நடித்துள்ள தக்லைப் படத்தை அடுத்து பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் தன்னுடைய 49 வது படத்தில் நடிக்கிறார் சிம்பு. அதையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 50 வது படத்தில் நடிக்கும் சிம்பு, பின்னர் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தனது 51 வது படத்தில் நடிக்க போகிறார். அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படி அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் மூன்று படங்களை குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படங்களை முடித்ததும் வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்க போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.
அதேசமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் படம் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த படம் தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்கிற இன்னொரு தகவலும் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்கள் அறிவிக்கும்போதுதான் தெரியவரும்.