விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி |

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்,வாழை என தொடர் வெற்றி படங்களுக்கு அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன் காள மாடன்' என்கிற படத்தை உருவாக்கி வருகின்றார்.
பசுபதி,அமீர்,அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அப்லாஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படம் இவ்வருடம் தீபாவளி அக்டோபர் 17ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என இன்று புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.




