பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
கடந்த 2022ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் 'ஜன கன மன'. அரசியல் காரணங்களுக்காக நடைபெறும் போலி என்கவுண்டரை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்தப்படத்தை இயக்கி இருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் காட்டப்பட்டிருந்த என்கவுண்டர் சம்பவமே ஆந்திராவில் ஒரு இளம்பெண் மரணத்திற்காக நடத்தப்பட்ட என்கவுண்டரைப் போலவே உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இதன் பின்னணியில் அரசியலுக்கான ஒரு போலி காரணம் இருந்தது என்பதை இந்தப்படத்தில் கூடுதலாக சேர்த்து உருவாக்கி இருந்தார்கள். இந்த படம் வெளியான பிறகு கொஞ்ச நாள் கழித்து ஆந்திராவில் அப்போது நடத்தப்பட்ட என்கவுண்டரும் போலியானது என்கிற உண்மை வெளியாகி அதிர்ச்சி அளித்தது.
அப்படி பரபரப்பை ஏற்படுத்திய இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என படம் வெளியாகும் முன்பே இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி கூறியிருந்தார். முதல் பாகத்தில் இடம் பெறாத சில காட்சிகளை கூட டீசராக வெளியிட்டார். இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். நேற்று இந்த படம் வெளியாகி மூன்றாவது வருடம் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் நாயகன் பிரித்விராஜின் கதாபாத்திர பெயரை குறிப்பிட்டு, “அரவிந்த் சுவாமிநாதன் தொடர்கிறார்” என்று சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இரண்டாம் பாகத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
'ஜன கன மன' படத்திற்கு பிறகு நிவின்பாலியை வைத்து இவர் இயக்கிய 'மலையாளி பிரம் இந்தியா' படம் பெரிய வரவேற்பு பெறாத நிலையில் அனேகமாக ஜன கன மன இரண்டாம் பாகத்தை எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் வேலைகளில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இறங்கியுள்ளார் என்றே தெரிகிறது.