'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ரஜினி தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மலை பகுதியில் நடந்து வருகிறது. 15 நாட்கள் தொடர்ச்சியான படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை திருப்பினார்.
அவரை விமானநிலையத்தில் சந்தித்த பத்திரிகையாளர்கள் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது "காஷ்மீரில் தீவிரவாத செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி இயற்கையாக திரும்பி இருப்பது, எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதை செய்தவர்களுக்கும், அதன் பின்னால் இருப்பவர்களையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.