தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது படங்களில் நடிக்கவும் தொடங்கி உள்ளார். விரைவில் ரஜினியின் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க போகிறார். சென்னையில் நடந்த தனது ‛45' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் உபேந்திரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தான் கமலின் தீவிர ரசிகன் என பேசி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், ‛‛நான் கமல் சாரின் தீவிர ரசிகன் என எல்லோருக்கும் தெரியும். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் ஆபரேஷன் முடிஞ்ச சமயத்தில் கமலிடம் இருந்து போன் வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் சரியாகவிடும் என்றார். அந்தசமயம் என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்.
ஹீரோ என்றால் கமல் மாதிரி இருக்கணும். கமல் என்றால் அழகு. ஒருவேளை நான் பெண்ணாக பிறந்து இருந்தால் நிச்சயம் அவரை திருமணம் செய்து இருப்பேன். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் என கேட்டார். என் மகன் என்றார் அப்பா. அப்போது நான் ஒருமுறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா என கமலிடம் கேட்டேன். அவரும் சம்மதித்தார். அதன்பின் மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. கமலின் ஆரா எனக்கு தேவைப்பட்டது. அந்தளவுக்கு நான் அவரின் வெறித்தனமான ரசிகன்'' என்றார்.




