அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் இன்று திரைக்கு வந்து அஜித் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு பிரபலங்களும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவரிடத்தில், குட் பேட் அக்லி படம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார் . அதோடு கூலி படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. ஜெயிலர்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறிய ரஜினிகாந்த் , மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி. ரொம்ப நல்ல மனிதர். அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.