பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை |

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'பராசக்தி'. தமிழ் சினிமாவில் புதிதாக சில பல பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த பின் நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் பலரும் சென்னை திரும்பி விட்டனராம். ஆனால், தயாரிப்புப் பணிகளைக் கவனித்து வந்த சிலர் இன்னமும் இலங்கையில் சிக்கித் தவிப்பதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் படப்பிடிப்பு நடத்தியதற்கான செலவுத் தொகையை தயாரிப்பு நிறுவனம், அங்கு படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு இன்னும் தரவில்லையாம். அதனால், அவர்களது பாஸ்போர்ட்களை அந்நிறுவனம் வாங்கி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது நடந்த செலவுக்கும் அதைத் தயாரித்த நிறுவனம் பாக்கி வைத்துவிட்டுப் போனதாம். அப்படி இந்த 'பராசக்தி' படத்திற்கு நடந்து விடக் கூடாதென்பதுதான் பாஸ்போர்ட் பிடுங்கல் என்கிறார்கள்.
இவ்வளவு பெரிய நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா என கோலிவுட்டில் உள்ள தயாரிப்பு நிர்வாகிகள் கடிந்து கொள்கிறார்கள்.
'பராசக்தி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி மீண்டும் ஆரம்பமாகவில்லை என்றும் ஒரு தகவல். தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோருக்கிடையே ஏதோ பிரச்சனையாம். சுதாவின் அணுகுமுறையும் படத்தின் நடிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்று ஒரு பேச்சு.