ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
சென்னையில் சிட் பண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனம், ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறது. மலையாளத் திரையுலகத்தில் அந்நிறுவனத்தின முதலீடுகள் அதிகம். சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'எம்புரான்' படத்தின் பங்குதாரராக கடைசி நேரத்தில் சேர்ந்தது.
'எம்புரான்' படத்தில் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும் சில காட்சிகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் அக்காட்சிகளை நீக்கி மறுதணிக்கை செய்து படத்தை மீண்டும் திரையிட்டனர்.
இந்நிலையில் கோகுலம் நிறுவனத்தின் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திரையுலகத்தில் அடிக்கடி வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கம்தான். ஆனால், தற்போது அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.