நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
சித்தா படத்திற்கு பின் அருண் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛வீர தீர சூரன்' பாகம் 2. விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்ராமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று(மார்ச் 27) வெளியாவதாக அறிவிக்கப்பட்டு படக்குழுவினர் ஒரு வாரத்திற்கு மேலாக திவீர புரொமோஷனில் ஈடுபட்டு இருந்தனர்.
ஓடிடி தொடர்பான பிரச்னையால் B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கால் இந்த படத்திற்கு டில்லி ஐகோர்ட் விதித்த தடை காரணமாக இப்படம் இன்று காலை வெளியாகவில்லை. தொடர்ந்து இன்று படத்திற்கு மேலும் 4 வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அந்த பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்ட நிலையில் ரிலீஸிற்கு விதிக்கப்பட்ட தடையை டில்லி ஐகோர்ட் நீக்கியது. இதையடுத்து இன்று மாலை முதல் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட தடங்கலுக்கு இயக்குனர் அருண் குமார் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛வீர தீர சூரன் படம் இன்று(மார்ச் 27) மாலை முதல் தியேட்டர்களில் வெளியாகிறது. எங்கப்பா காலையில் முன்று முறை இந்த படத்திற்கு டிக்கெட் வாங்க போய் படம் வெளியாகவில்லை என திரும்பி வந்துவிட்டார். அதேமாதிரி விக்ரம் ரசிகர்களும், பொது மக்களும் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இருப்பார்கள் என புரிகிறது. எல்லோரிடமும் படக்குழு சார்பாக உளமாற மன்னிப்பு கேட்கிறேன். இந்த பிரச்னையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.