இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பிரபல நட்சத்திர வீரராக வலம் வந்தவர் டேவிட் வார்னர். சமீப வருடங்களாக இந்திய சினிமாவை பெரிய அளவில் விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக தெலுங்கு திரையுலகம் பக்கம் தான் இவரது கவனம் திரும்பி உள்ளது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து ஆடிய 'புட்டபொம்மா' பாடலுக்கு தானும் அதுபோல நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகர் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இருவரும் ஜோடியாக நடித்துள்ள 'ராபின்ஹூட்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டேவிட் வார்னர். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக நடிகராக அடி எடுத்து வைத்துள்ளார் வார்னர். தற்போது இவரது கதாபாத்திர போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் மார்ச் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.