மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அப்போதிருந்த சென்னை மாகாண அரசு போருக்கு ஆதரவான படங்களையும், மக்களை அச்சத்தில் இருந்து மீட்கும் படங்களையும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து போரில் இந்திய வீரர்களின் தியாகம், ஆங்கில அரசின் நேர்மையான நிலைப்பாடு இவற்றை மையமாக கொண்டு படங்கள் வந்தன. இந்த படங்களுக்கு இடையே போரின் காரணமாக மக்கள் படும் அவஸ்தை மிக கடுமையான விலையேற்றம் இவற்றை கண்டித்தும், சென்னை மாகாண அரசை கிண்டல் செய்தும் வெளியான படம் 'மிஸ்.மாலினி'.
ஆர்.கே.நாராயண் எழுதிய 'மிஸ்டர் சம்பத்' நாவலை மையமாக வைத்து, கொத்தமங்கலம் சுப்பு திரைக்கதை எழுதி இயக்கி அவரே நாயகனாகவும் நடித்த படம், கதாநாயகி மாலினியாக நடித்தவர் புஷ்பவல்லி. ஜாவர் சீதாராமன், எம்.எஸ்.சுந்தரி பாய், எஸ்.வரலட்சுமி உட்பட பலர் நடித்தனர். இதில்தான் ஜெமினி பிலிம்சில் மானேஜராக இருந்த கணேசன் சிறிய வேடம் ஒன்றில், அறிமுகமானார். பின்னர் அவர் ஜெமினி கணேசன் ஆனார்.
புகழ்பெற்ற நாடக நடிகையான மாலினி ஒரு சாதாரண மனிதனை காதலித்து அவனை மட்டுமே நம்பி வாழ்க்கையை தொலைத்து பின்னர் மீண்டும் நாடகத்திற்கே திரும்பி வருவது மாதிரியான கதை.




