பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
'8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷ் இயக்கி வரும் படம் '3பிஎச்கே' (3படுக்கை அறை கொண்ட வீடு). இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமாரும், தேவயானியும் இணைந்து நடிக்கிறார்கள். அவர்களுடன் சித்தார்த், யோகி பாபு, மீதா ரகுநாத், மற்றும் சைத்ரா ஆகியோரும் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசை அமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன், ஜித்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஸ்வா தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணி முடிவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதுகுறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறும்போது "நாங்கள் திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்போம். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை மகிழ்விக்கும்" என்றார்.