பிளாஷ்பேக் : மேற்கத்திய நடனங்களிலும் கலக்கிய லலிதா, பத்மினி | ஹீரோயின் ஆனார் முல்லை அரசி | வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு | டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா | பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் |
90களின் காலகட்டத்தில் பாலிவுட்டில் கலக்கி வந்தவர் நடிகர் கோவிந்தா. இவரும், மனைவி சுனிதா அஹூஜாவும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுனிதா சமீபகாலமாக எந்தவொரு நிகழ்விலும் கணவர் கோவிந்தா உடன் பங்கேற்கவில்லை. இதுப்பற்றி அவர் கூறுகையில், கோவிந்தாவுடன் தான் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றும், தனது குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசிப்பதாகவும், கோவிந்தா அதற்கு எதிரே உள்ள பங்களாவில் வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இது இவர்களது பிரிவை உறுதிப்படுத்தியது.
தொடர் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும், அதுவே அவர்களது உறவில் விரிசலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. திருமணமாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது விவாகரத்து செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருந்தும், இந்த தகலை இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.