எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

கன்னட சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மேகா ஷெட்டி. கன்னட சீரியல் 'ஜோதே ஜோதேயலி' மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 'டிரிபிள் ரைடிங்', 'தில்பசந்த்' மற்றும் 'கைவா' உள்பட ஏழு படங்களில் நடித்துள்ளார் . அவரது அடுத்த படமான 'ஆப்டர் ஆபரேஷன் லண்டன் கபே' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதேநேரத்தில் 'கிராமாயணா' மற்றும் 'சீட்டா' படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேகா ஷெட்டி தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் இதற்காக அவர் தமிழ் மொழியும் கற்று வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது "சொந்த மொழியில் சாதித்த பிறகு பிறமொழிகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எழுவது இயற்கையானது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக இரண்டு மொழிகளையும் கற்று வருகிறேன். நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தும் விதமாக சவால் நிறைந்த கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன்.
சினேகா, நதியா போன்ற நடிகைகள் தங்களது அழகு, திறமை போன்ற விஷயங்களால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே நானும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரேவிதமான கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்பவில்லை. எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.




