'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'டீசல்'. கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா, விவேக் பிரசன்னா என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை தெர்ட் ஐ புரொடக்சன்ஸ், எஸ்.பி.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இது ஹரிஷ் கல்யாண் திரை பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படமாக அமைந்துள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ‛பீர் சாங்' எனும் பாடல் ரீல்ஸ், சார்ட்ஸ் போன்றவற்றில் வைரலானது . இப்போது டீசல் படத்திலிருந்து அடுத்து இரண்டாவது பாடலான 'தில்லுபாரு ஆஜா' என்கிற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இப்பாடல் வருகின்ற பிப்ரவரி 18ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.