அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

புஷ்பா- 2 படத்தை அடுத்து ஹிந்தியில் சாவா, சிக்கந்தர், தமா மற்றும் தெலுங்கில் குபேரா, தி கேர்ள் பிரண்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. விக்கி கவுசலுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் சாவா என்ற ஹிந்தி படம் வருகிற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது. லக்ஷ்மன் உடேகர் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
மராட்டிய மன்னன் சாம்பாஜியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்கி கவுசல் மகாராஜா சாம்பாஜியாக நடிக்க, மகாராணி எசுபாய் என்ற வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரது இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு போஸ்டரில், கழுத்து நிறைய நகை அலங்காரத்துடன் பட்டு புடவை கெட்டப்பில் சிரித்த முகத்துடன் காட்சி கொடுக்கும் ராஷ்மிகா, இன்னொரு போஸ்டரில் கோபத்துடன் நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்தபோது காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் ராஷ்மிகா, நேற்று பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கி நொண்டி நொண்டி நடந்து சென்று வீல் சேரில் அமர்ந்துள்ளார். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.