லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் 'சாட்சி பெருமாள்'. ஆர்.பி.வினு இயக்குகிறார், மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார், மஸ்தான் இசை அமைக்கிறார். அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் வினு கூறும்போது “பத்திரப்பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். இது அவர்களின் தொழில், ரேஷன் கார்டு, ஆதார்காடு சகிதம் அங்கேயே இருப்பார்கள். அவர்களில் ஒருவரின் கதை. இப்படி சாட்சி கையெழுத்து போடுகிறவர்களுக்கு பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்காது. அரிதாக ஒருசிலர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் அவர்களில் ஒருவரின் கதைதான் இது. அவருக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதை எப்படித் தீர்க்கிறார் என்பதை சொல்லும் படம். என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பாதிப்பில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன்.
பெரியகுளம், அகமலையில் படப்பிடிப்பை முடித்துள்ளோம். யதார்த்தமான இந்தப் படத்தைப் பட விழாக்களுக்காகவே உருவாக்கினேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த திரைப்பட விழாக்களில் பங்கேற்று 12 விருதுகளைப் பெற்றிருக்கிறது. மேலும் சில பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். விரைவில் ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது” என்றார்.