ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

'அமரன்' படத்திற்கு பிறகு தெலுங்கில் 'தண்டேல்' படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்துள்ள சாய்பல்லவி, அதையடுத்து ஹிந்தியில் 'ராமாயணா' படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள ஒரு பேட்டியில், ''சிறுவயதாக இருந்தபோது நாங்கள் பெரிய பணக்காரர்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு நாங்கள் வசதியான குடும்பம் அல்ல என்பது அதன்பிறகுதான் தெரியவந்தது. ஆனால் இப்போது ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு என்னிடம் பணம் உள்ளது. இதை எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்,'' என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
மேலும், சினிமாவில் தான் நடித்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு தொகையை கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். அதோடு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். மேலும், படிக்கிற மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது என பல சமூக பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார் சாய் பல்லவி.