அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மும்பையில் பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பந்த்ராவில் பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதியர் வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல சைப் அலிகான் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளார். இதை பார்த்த நடிகர் சைப் அலிகானை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சைப் அலிகானுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவர் கூறுகையில், 'அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரது உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதில், 2 இடங்களில் பலத்த காயமாகும். முதுகு எலும்பு பக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது', என்றார்.
பாலிவுட் நடிகர் சைப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் ஹிந்தி திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு நடிகர் சைப் அலிகான் ஆவார். இவரது தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். தாயார் பிரபல நடிகை சர்மிளா தாகூர்.