திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ளார். சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல் சில மாதங்களாக ஏ.ஐ தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை படித்து வருகிறார். இந்தியா திரும்பிய பிறகு அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் அவரது 237வது படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கான முன் தயாரிப்பு மற்றும் கதை விவாத பணிகளில் கமல் மற்றும் அன்பறிவு ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க போவதாக ஏற்கனவே தகவல் வந்தது. இப்போது அனிரூத் பெயரும் அடிபடுகிறது. இவர்களில் கமலின் முடிவு ஜி.வி. பிரகாஷ் பக்கம் தான் இருக்கும் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.