நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள மலையாள படம் 'ஒறும்பேட்டவன் ' இந்தப் படம் 'துணிந்தவன்' என்ற பெயரில் வருகிற மூன்றாம் தேதி தமிழிலும் வெளியாகிறது.
இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். உன்னி நம்பியார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இந்திரன், ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ.என்.விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ், நடித்துள்ளனர். கதையின் பிரதான பாத்திரமான 10 வயது சிறுமியாக தயாரிப்பாளரின் மகள் காஷ்மீரா நடித்துள்ளார்.
பற்றி இயக்குநர் சுஜீஷ் கூறும்போது, "அந்த பத்து வயதுக் குழந்தையை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். எப்போதும் துறுதுறு என்றும், சுறுசுறுப்பாகவும் ஆற்றலின் வடிவமாக அந்தச் சிறுமி காணப்படுவாள். வயது பத்து தான் என்றாலும் இருபது வயதுக்குடைய முதிர்ச்சியோடு பேசுவாள், மனிதர்களைப் புரிந்து கொள்வாள். யாருடைய தோற்றத்தைப் பார்த்தும் அவர்களுடைய குணத்தைக் கண்டுபிடித்து விடுவாள். ஒருவருடைய முக அசைவைப் பார்த்தே அவர்களது மனத்தைக் கணித்து விடுவாள்.
குடித்துவிட்டு வருபவரையும் கண்டுபிடித்து விட்டு திட்டுவாள். அம்மா, அப்பா, அந்தக் குழந்தை என்று இருக்கும் அந்த பாசக் குடும்பத்தில் காலத்தின் கோலத்தால் ஒரு புயல் அடிக்கிறது. பல சிக்கலில் இருந்து குழந்தை மீண்டு வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. எல்லா மொழிகளுக்கும் பொருத்தமான கதை என்பதால் இதனை தமிழில் வெளியிடுகிறோம்" என்றார்.