படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
தற்போது எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட வசன காட்சிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், சண்டை, பாடல் காட்சிகளோடு மொத்த படப்பிடிப்பும் முடிவடையப்போகிறது. கடந்த வாரத்தில் சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தோடு விஜய் சம்பந்தப்பட்ட மொத்த காட்சிகளையும் படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளார் எச். வினோத்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் கட்சியில் இணைந்த நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வருகிற ஜனவரி 27ம் தேதி முதல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாக தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் விக்ரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டுக்கு பிறகு 69வது படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த விஜய் அந்தப் படத்தை முடித்ததும் தீவிர அரசியலில் இறங்கபோவது தெரியவந்துள்ளது.