ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மகன் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். அந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு நாள் இருந்து வெளியில் வந்த அல்லு அர்ஜுனை தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சென்று சந்தித்தனர். கடந்த வாரம் தெலுங்கானா மாநில சட்டசபையில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனையும், தெலுங்கு சினிமா பிரபலங்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், “பிரீமியர் காட்சியின் போது நடந்தது ஒரு விபத்து,” என்று பேசியிருந்தார்.
இதனிடையே, அல்லு அர்ஜுனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹைதராபாத் காவல்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இன்று (டிச.,24) காலை 11 மணியளவில் அவர் ஆஜராகினார். அவரிடம் போலீசார் நான்கரை மணிநேரம் விசாரித்தனர். 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்பட்டதாகவும் அதற்கு அல்லு அர்ஜூன் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
பவுன்சர்களை அனுப்பியவர் கைது
அல்லு அர்ஜூன், புஷ்பா 2 திரையிட்ட தியேட்டருக்கு வந்தபோது அவரது பாதுகாப்புக்கு பவுன்சர்களை அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் விசாரிக்கின்றனர்.