ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' |

ஒரு ஹீரோ இரட்டை வேடத்தில் நடிப்பது இப்போது சாதாரண விஷயம். ஆனால் தொழில்நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் அது மிகவும் கடினம். அப்படியான 1940ல் நடித்தவர் பி.யூ.சின்னப்பா. பிரபல ஹாலிவுட் படமான 'தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்' என்ற படத்தை மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் 'உத்தமபுத்திரன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். நாட்டை ஆளும் தீய மன்னன் தன் சொந்த சகோதரனை இரும்பு முகமூடி அணிவித்து சிறையில் தள்ளுவதும், பின்னர் அவர் தப்பித்து மன்னரை திருத்துவதும்தான் கதை. இதில் விக்ரம பாண்டியன், சொக்கநாத பாண்டியன் என்ற இரு வேடத்தில் பி.யூ.சின்னப்பா நடித்தார்.
இரட்டை வேடங்களிலேயே அவர் டூப் போடாமல் வாள் சண்டை போட்டது இப்போதும் ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்று. சின்னப்பா ஜோடியாக கன்னட நடிகை எம்.வி.ராஜம்மா நடித்தார். டி.எஸ்.பாலையா வில்லனாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தியாகராஜ பாகவதரை முந்தி சூப்பர் ஸ்டார் ஆனார் பி.யூ.சின்னப்பா. படமும் சூப்பர் ஹிட்டானது.
பின்னர் இதே கதையில் இதே தலைப்பில் சிவாஜி நடித்த படமும் பெரிய வெற்றி பெற்றது.




