'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? |

கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. மாறுபட்ட காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்தநிலையில் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் 'இரும்புக்கை மாயாவி' படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், ''மாநகரம் படத்திற்கு முன்பே சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் எனது நண்பரான லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் நானும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. என்றாலும் அந்த படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக இயக்குவார். அப்போது அதில் சூர்யாவுடன் இணைந்து ஏற்கனவே நடிக்க இருந்த அதே வேடத்தில் நானும் கண்டிப்பாக நடிப்பேன்,'' என்று தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.