இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் பின்னணி இசையை பாடல்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவில்லை என கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஒரு சர்ச்சை எழுந்தது. இசையமைப்பாளர் தமன், சாம் சிஎஸ், அஜனிஷ் லோகநாத் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பின்னணி இசையமைக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது. இப்படத்தின் பின்னணி இசையில் தானும் பணியாற்றுவதாக தமன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, 'புஷ்பா 2' டிரைலர் வெளியாவதற்கு முன்பாக சுமார் பத்து நாட்களாக அந்தப் படம் பற்றிய எந்த ஒரு பதிவையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தேவி ஸ்ரீ பிரசாத் தவிர்த்து வந்தார். டிரைலருக்கு அவர்தான் இசையமைத்தார் என்ற தகவலும் வெளியானது. டிரைலருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அது பற்றி பல பதிவுகளை போட்டு வருகிறார்.
அதோடு புஷ்பா 2 படக்குழுவுடன் தேவி ஸ்ரீ பிரசாத் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ள சந்திரபோஸ் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் தயாரிப்பாளர் நவீன் எர்னெனி, இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன், தேவி ஸ்ரீ பிரசாத், சந்திரபோஸ் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
இருந்தாலும் 'புஷ்பா 2' பின்னணி இசையயை யார் அமைக்கிறார்கள் என்பது குறித்து பட நிறுவனம் எந்த ஒரு அப்டேட்டையும் இதுவரை வெளியிடவில்லை.