கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' |
1976ம் ஆண்டு வெளியாகி ஹிந்தியில் வெள்ளி விழா கொண்டாடிய படம் 'அதாலட்'. அமிதாப்பச்சன், வகிதா ரகுமான், நீட்டு சிங் உள்பட பலர் நடித்திருந்தார்கள். அந்த காலத்திலேயே 3 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 100 கோடி வரை வசூலித்த படம். முரண்பட்ட குணங்களை கொண்ட தந்தை, மகன் கதை, அமிதாப் பச்சன் தந்தை, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருந்தார்.
இந்த படத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு 'விஸ்வரூபம்' என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஏ.சி.திருலோகசந்தர். இதில் சிவாஜி கணேசன் அமிதாப் நடித்த தந்தை, மகன் கேரக்டர்களில் நடித்தார். படமும் பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தி படம் போன்று பிரமாண்டமாக படம் உருவாகவில்லை என்றாலும் சிவாஜியின் நடிப்புக்காக படம் வெற்றி பெற்றது. அமிதாப்பச்சனை விட சிவாஜி பிரமாதமாக நடித்திருந்தாக அன்றைக்கு பாராட்டினார்கள். அமிதாப் பச்சனே இதனை பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
படத்தில் ஸ்ரீதேவி, மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார், பத்மாலயா பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.