புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து சில தினங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை தினத்தன்று திரைக்கு வந்த படம் 'லக்கி பாஸ்கர்'. மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருந்தார். வங்கி பணம் மோசடி தொடர்பாக இப்படம் வெளியாகி இருந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த இப்படம் தற்போது உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 55.4 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.