தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகின் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நேற்று தீபாவளி ரிலீஸாக தெலுங்கு மற்றும் தமிழில் அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகி உள்ளது. பொதுவாகவே கதை அம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் குறூப், கிங் ஆப் கொத்த உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை மாறி மாறி வெளிப்படுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
அதே சமயம் சமீபத்தில் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் பேசிய சில பஞ்ச் வசனங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகின. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் துல்கர் சல்மானிடம் நீங்கள் ஏன் பஞ்ச் வசனம் பேசுவதில்லை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “பஞ்ச் வசனங்களை சில ஹீரோக்கள் மட்டும் பேசினால் தான் அது பொருத்தமாக இருக்கும். நான் பேசினால் தம்பி இன்னும் நீ அந்த அளவுக்கு வளரவில்லை என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். கிங் ஆப் கொத்த படத்தில் கூட அதுதான் நடந்தது” என்று கூறியுள்ளார்.