தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா,பிரசன்னா,அர்ஜுன் தாஸ்,பிரபு, யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்திலிருந்து அஜித் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ள ஒரு போட்டோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் புதிய தோற்றத்தில் உள்ளனர். குட் பேட் அக்லி படத்திலிருந்து சமீபகாலமாக வெளிவரும் ஒவ்வொரு போட்டோவும் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.