2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'96' என்ற படத்தை இயக்கிய பிரேம்குமார் அதையடுத்து கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம் மெய்யழகன். குடும்பப்பாங்கான கதையில் உருவான இந்த படம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வெளியானது. இப்படம் திரைக்கு வந்தபோது சில காட்சிகள் படத்தின் வேகத்தை குறைப்பதாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து 18 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படம் அக்டோபர் 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அக்டோபர் 27ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்திருக்கிறது. தீபாவளியை கருத்தில் கொண்டு இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.