'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
முத்தைத்தரு பத்தித் திருநகை, அத்திக்கிறை சத்திச் சரவண, முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்...'
'சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி, சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்...'
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்...'
'இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்'
'வருவேன் நான் உனது வாசலுக்கே...'
'உள்ளத்தின் கதவுகள் கண்களடா, இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா...'
'குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதாக...'
'ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே...'
இப்படியான பாடல்களை அடிக்கடி ரசித்து கேட்போம். இதற்கு இசை அமைத்திருப்பது எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லது கே.வி.மகாதேவன் என்றே பலரும் நினைத்திருப்போம். ஆனால் இதற்கு இசை அமைத்தது டி.ஆர்.பாப்பா. குறைவான படங்கள், குறைவான பாடல்களுக்கு இசை அமைத்திருந்தபோதும் அத்தனை பாடல்களையும் ஹிட் பாடலாக கொடுத்த ஒரே இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பாதான்.
மிகப்பெரிய வயலின் வித்வானாகத் திகழ்ந்து, இசையமைப்பாளராக உயர்ந்தவர். திருத்துறைப்பூண்டிதான் சொந்த ஊர். அப்பா பெயர் ராதாகிருஷ்ணன். இவருடைய பெயர் சிவசங்கரன். ஆனால், 'பாப்பா' என்றுதான் அழைப்பார்கள். ஆகவே அவர் டி.ஆர்.பாப்பா என்றே அழைக்கப்பட்டார்.
மலையாளப் படமான 'ஆத்ம காந்தி' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். 2004ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி 82வது வயதில் காலமானார். நேற்று அவரது 20வது நினைவு நாள்.