சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

எச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய்யின் கடைசி மற்றும் 69வது படமாக உருவாக உள்ள படத்தில் யார், யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அப்டேட் நேற்று முன்தினம் முதல் அவ்வப்போது அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பதாக நேற்றுவரை படக்குழு அப்டேட் கொடுத்தது.
இன்று, இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனனும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை பிரியாமணி, நடிகர் பிரகாஷ்ராஜ்-ம் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுப்பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.