Advertisement

சிறப்புச்செய்திகள்

வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம்

21 செப், 2024 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Vedika-the-industrious,-Sunny-Leone-the-humanist-:-Praise-of-Prabhu-Deva

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜெ.சினு இயக்கத்தில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'பேட்ட ராப்'. வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். வருகிற 27ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரபுதேவா பேசியதாவது: இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம் என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருந்தது.

இமான் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் எனக்கு அவர் ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் தெரிகிறார். அவருடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் பாசிட்டிவ்வானவர். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார்.

நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன்.

வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா. அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். சன்னி லியோன் நடிகை என்பது கடந்து மனிதநேயம் மிக்கவர். அனைவரையும் நேசிப்பவர், மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டிஎன்னை பற்றி என்ன வேண்டுமானாலும் ... பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in