அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவின் தந்தை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா. மாடலிங் செய்து, டிவியில் பணியாற்றி பின்னர் சினிமாவிற்கு வந்தார். மணிரத்னம் இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த ‛தில் சே' (உயிரே) படத்தில் வரும் தைய்ய தைய்யா பாடலுக்கு நடனம் ஆடி பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி உள்ளார்.
இவரது தந்தை அனில் அரோரா. இந்திய கப்பல் படையில் வேலை பார்த்தவர். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். சமீபகாலமாக இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வீட்டின் 6வது மாடியிலிருந்து அனில் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மும்பை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலைக்கா அரோரா 11 வயதாக இருக்கும் போதே அவரது தந்தையும், அம்மாவும் பிரிந்துவிட்டனர். மலைக்கா, அவரது சகோதரி அம்ரிதா ஆகியோர் தாயார் உடன் வசித்து வந்தனர். தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்டு புனேவில் இருந்து மும்பைக்கு விரைந்து வந்தார் மலைக்கா. மலைக்காவின் முன்னாள் கணவரும், நடிகருமான அர்பாஸ் கான், அனில் அரோரா இறந்த செய்தி அறிந்து அவரது வீட்டிற்கு வந்தார்.
அனில் அரோராவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவரின் மறைவு குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.