Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடியில் கூடுதல் நேரத்துடன் வெளியாகுமா 'தி கோட்'?

09 செப், 2024 - 11:56 IST
எழுத்தின் அளவு:
The-Goat-will-release-with-extra-time-on-OTT

விஜய் நடிப்பில், யுவன் இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'தி கோட்'. இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாகவே இப்படம் ஓடியதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தியேட்டர்களில் 'தி கோட்' படம் 3 மணி நேரம் 3 நிமிடம் ஓடக் கூடியதாக இருந்தது. இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு எடிட் செய்து முடித்த போது 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக் கூடிய படமாக இருந்ததாம். அதன்பின்பு 37 நிமிடக் காட்சிகளைக் குறைத்துத்தான் தியேட்டர்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் போது அந்த குறைக்கப்பட்ட 37 நிமிடக் காட்சிகளையும் சேர்த்து 3 மணி நேரம் 40 நிமிடக் காட்சிகளாக இந்த படத்தை வெளியிடப் போகிறார்களாம். இத்தகவலை எக்ஸ் தளத்தில் 'ஸ்பேஸ்' பேச்சில் தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு. அப்படி வெளியிடலாம் என்ற தகவலை தயாரிப்பாளர் சொன்னதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

ஓடிடியில் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛ராட்சசன்' பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்‛ராட்சசன்' பட தயாரிப்பாளர் டில்லி ... துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரவி தேஜா பட நடிகை துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
09 செப், 2024 - 04:09 Report Abuse
KayD history repeats னு சொல்லுவாங்க .. பழைய காலத்தில சினிமா மட்டும் தான் பிரதான பொழுதுபோக்கு அப்போ ஐந்து மணி நேரம் மேற் ஓடிய படங்கள் பல உண்டு. என்ன தான் இருந்தாலும் விஜய் படம் தான் என்றாலும் இவளவு நேரம் பார்த்தல் மூலநோய் பிரச்சினை தான் வரும் .. படம் தியேட்டர் ல பார்க்க போர் அடிக்கவில்லை இருந்தாலும் ஒரு பழைய படத்தை டிஜிட்டல மாற்றி பார்க்கும் மாதிரி தான் இருந்தது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in