தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் திபீகா படுகோன். தமிழில், கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, பான் இந்தியப் படங்களில் நடித்து வருகிறார். 2018ல் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், திருமணத்துக்குப் பின்பும் பல படங்களில் நடித்தார். கடைசியாக அவரது நடிப்பில், ‛கல்கி ஏடி 2898' படம் வெளியாகியிருந்தது. இதற்கிடையே அவர் கருவுற்றிருந்தார். கல்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட கர்ப்பமான நிலையிலேயே பங்கேற்றார்.
இந்த நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனையில் பிரசவத்திற்காக தீபிகா படுகோன் நேற்று (செப்.,7) அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.